முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம்

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீரங்கம் - ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 
ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தை தேரோட்ட விழா கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கடந்த 28ம் தேதி தங்க கருட வாகனத்திலும், 29ம் தேதி சேஷ வாகனத்திலும், 31ம் தேதி திருச்சிவிகையில் உபயநாச்சியார்களுடன் பூந்தேரிலும் நம்பெருமாள் காட்சியளித்தார்.

ஞாயிற்று கிழமை தங்க குதிரை வாகனத்தில் உள் திருவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் புறப்பட்டு 5 மணிக்கு உத்தர வீதியில் உள்ள திருத்தேர் மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து 6.30 மணி வரை ரதரோஹனம் பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேர் வடம் பிடித்தல் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நான்கு உத்தர வீதிகளில் வலம் வந்த தேர் 11 மணிக்கு நிலையை அடைந்தது. சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீற்றிருந்த நம்பெருமாளையும்,உபயநாச்சியார்களையும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பிற்பகல் ஒரு மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்று சேர்ந்தார். நேற்று சப்தா வரணம் நிகழ்ச்சியும், இன்று இரவு ஆளும் பல்லக்கிலும் நம்பெருமான் உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

திங்கட்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் செய்திருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து