முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி கடலில் மேல் அடுக்கு சுழற்சி: மழைக்கு வாய்ப்பு

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் காலத்துக்கு முன்னதாகவே தென்மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. அதிபட்சமாக மதுரை, பாளையங்கோட்டையில் 97 டிகிரி வெயில் கொளுத்தியது.
 
இந்த நிலையில் வங்க கடலில் இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. உள்மாவட்டங்களிலும் ஓரிரு பகுதியில் மழை பெய்தது. இது வெயிலின் உச்சத்தை தணிப்பதாக அமைந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பலவீனம் அடைந்து கலைந்து விட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதால் தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று காலையில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. ஒருசில இடங்களில் மழை தூறல்கள் விழந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து