முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது வங்கதேசம்

திங்கட்கிழமை, 9 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

அடியெல்ட் - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது வங்கதேசம். நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியோ 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

உலக கோப்பை போட்டியின் 33வது லீக் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்தும், வங்கதேசமும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது.வங்கதேசத்தின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பாலும் காயெஸும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வங்கதேசத்தை அதிர்ச்சியடைய வைத்தது இங்கிலாந்து.முதல் ஓவரின் 4வது பந்தில் காயெஸ் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். இதேபோல் தமீம் இக்பால் 2.1வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 2.1 ஓவரில் 8 ரன்களே எடுக்கப்பட்ட நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம்.

இருப்பினும் பின்னர் வந்த சவும்ய சர்க்கார், மக்மதுல்லா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சவும்ய சர்க்கார் 52 பந்துகளில் 40 ரன்களை எடுத்து அவுட் ஆனார். ஷகிப் அல் ஹசன் 6 பந்துகளில் 2 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து மக்மதுல்லா- முஷ்பிகுர் ரஹிம் ஜோடி இணைந்து நிதானமான நின்று ரன்களைக் குவித்தனர். 131 பந்துகளில் சதத்தை எட்டினார் மக்மதுல்லா. இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம். அத்துடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்த முதலாவது வங்கதேச வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மொத்தம் 138 பந்துகளில் 103 ரன்களை எடுத்த நிலையில் மக்மதுல்லா அவுட் ஆனார். 
 
முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி சென்ற நிலையில் 89 ரன்களில் அவுட் ஆனார். அவர் 77 பந்துகளில் 89 ரன்களைக் குவித்தார். இவர்களுக்குப் பின்னர் சபீர் ரகுமான் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களைக் குவித்தது.

இங்கிலாந்து அணி 276 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அதன் தொடக்க வீரர்களாக மொயின் அலி, பெல் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினர்.7.2 ஓவரில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 43 ஆக இருந்த போது மொயின் அலி ரன் அவுட் ஆனார். அவர் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் பெல்லுடன் ஹேல்ஸ் கை கோர்த்தார். ஹேல்ஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 34 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த கையோடு நடையைக் கட்டினார்.
 
அப்போது 19.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 97 ரன்களைக் குவித்திருந்தது.களத்தில் இருந்த பெல் 82 பந்துகளில் 63 ரன்களை குவித்து அவுட் ஆனார்.. ரூட் 47 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். 35.4 ஓவர்களில் இங்கிலாந்து 163 ரன்களை சேர்த்திருந்தது. பட்லர்-வோக்ஸ் ஜோடி நிலைத்து ஆடி ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தது. பட்லர் அரை சதத்தைக் கடந்து 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே வந்த வேகத்தில் ஜோர்டான் அவுட் ஆனார்.
களத்தில் நின்றிருந்த வோக்ஸுடன் கை கோர்க்க கடைசி வரிசை வீரர்கள் தவறியதால் இங்கிலாந்து அணி பெரும் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டது.

45.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து. கடைசி வரிசை வீரர்களான ப்ராட், ஆண்டர்சன் ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால் 48.3 ஓவரில் இங்கிலாந்து அணியால் 260 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு நுழைந்தது. நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தே இங்கிலாந்து வெளியேறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து