முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2026      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப்ரல் முதல் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதால், அதற்கான தயாரிப்புப் பணிகளை நிறைவு செய்யுமாறு அந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பணி நிறைவடைந்தால், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளா் பட்டியிலும் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்பட்டப்பட்டிருக்கும். இதுதொடா்பாக ஆந்திரம், அருணாசல பிரதேசம், சண்டீகா், தாதா் நாகா் ஹவேலி மற்றும் டாமன் டையூ, ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட், கா்நாடகம், லடாக், மகாராஷ்டிரம், மணிப்பூா், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ஒடிஸா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா, உத்தரகண்ட் ஆகிய மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், ‘நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆா். பணியை மேற்கொள்ள கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப்ரல் முதல் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதால், அதற்கான தயாரிப்புப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்’ என்று தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

முதல் கட்டமாக, கடந்த 2025-ல் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்த பீகாா் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆா். பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, விரைவில் தோ்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்பட மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட எஸ்.ஐ.ஆா். பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

அதுபோல, விரைவில் தோ்தலைச் சந்திக்க உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்துக்கும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் (எஸ்.ஐ.ஆா்.) இடைப்பட்ட நடைமுறையான, சிறப்புத் திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, புதுச்சேரி, அஸ்ஸாம், குஜராத் உள்ளிட்ட யூனியன் பிரதேசம் மற்றும் மாநிலங்களில் இறுதி வாக்காளா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டன. கேரளத்தில் வரும் 21-ஆம் தேதியும், தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் வரும் 28-ஆம் தேதியும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எஸ்.ஐ.ஆா். பணி நிறைவடைந்த மற்ற மாநிலங்களிலும் அடுத்தடுத்து இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து