Idhayam Matrimony

'தி கேரளா ஸ்டோரி - 2' திரைப்படத்தை தடை செய்ய கேரள முதல்வர் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2026      சினிமா      இந்தியா
Pinaraye 2024-12-04

திருவனந்தபுரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரிக்கு எதிராக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இதில், கேரளத்தைச் சோ்ந்த 32,000 ஹிந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

வெளியானபோதே பல சர்ச்சைகளைக் கிளப்பியதுடன் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான திரைப்படமாக உள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், வணிக ரீதியாக வெற்றிப்படமானதுடன் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றது. தற்போது, இதன் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. காமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ள இதனை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ளார்.

முதல் பாகத்தினைப் போலவே டிரைலரில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, ஹிந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மாற்றுவது தொடர்பான வசனங்களும் கட்டாயப்படுத்தி ஹிந்துப் பெண்ணை மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் பதிவாகியுள்ளன. இதனைப் பலரும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், “தி கேரள ஸ்டோரி திரைப்படம் - 2 சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் கேரளத்தில் கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுவதாக அரசு எதிராக வெறுப்பினைப் பரப்பினர். இதுவும் மதச்சார்பின்மையைக் கெடுக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதால், கேரளா ஸ்டோரி - 2 திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து