எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். உலகின் வலிமையான ராணுவ படை சில சமயங்களில் மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு கடுமையாகத் தாக்கப்படலாம் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் இருந்து வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்த ஈரான் அங்கு ராணுவ பயிற்சி மேற்கொண்டது. பயிற்சிகளின் போது நீர்வழியில் செல்லும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தெஹ்ரானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அயதுல்லா அலி கமெனி பேசியதாவது:- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். உலகின் வலிமையான ராணுவ படை சில சமயங்களில் மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு கடுமையாகத் தாக்கப்படலாம்.
அமெரிக்கர்கள் ஈரானை நோக்கி ஒரு போர்க்கப்பலை அனுப்பியதாக தொடர்ந்து கூறுகிறார்கள். நிச்சயமாக ஒரு போர்க்கப்பல் ஒரு ஆபத்தான ராணுவ இருப்பு ஆகும். ஆனால் அந்த போர்க்கப்பலை விட ஆபத் தானது ஒன்று உள்ளது. அது போர்க்கப்பலுக்கு கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பக் கூடிய ஆயுதம் ஆகும். ஈரான் அரசாங்கத்தை அகற்ற அமெரிக்கா பல ஆண்டுகளாக முயன்று அதில் தோற்றது. அதை நீங்களும் (ட்ரம்ப்) செய்ய முடியாது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


