முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சித் தொடங்குகிறார்

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2026      இந்தியா      அரசியல்
Kavita 2023-10-22

ஐதராபாத், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கடந்த 2025 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில், வியாழக்கிழமை (பிப். 19) செய்தியாளர்களுடன் பேசிய கவிதா, வரும் மே மாதம் முதல் வாரத்தில் வரும் முகூர்த்தத்தில் தான் புதிய கட்சி ஒன்றைத் துவங்குவதாகவும், அக்கட்சியின் பெயரில் தெலங்கானா எனும் வார்த்தை இடம்பெற்றிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தெலங்கானாவின் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் சித்திப்பேட்டை அல்லது போதன் ஆகிய தொகுதிகளிலிருந்து போட்டியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளுக்கு சித்திப்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அவரது தந்தை சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வந்தார்.

முன்னதாக, பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கவிதா அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் அந்தக் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து