முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலியை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்: உளவியல் நிபுணர் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோலி அடிக்கடி கோபம் அடைகிறார். எனவே அவர் தன் நடத்தையே சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று உளவியல் நிபுணர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆட்ட நேரத்தில் அடிக்கடி கோபமடைகிறார் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன் அணி வீரர் பிரிதீவ் பட்டேல் விராட் கோலியை அவுட்டாக்கினார். இதனால் கோபமடைந்த கோலி பிரதீவ் பட்டேலை பார்த்து ஏதோ சில அர்த்தமற்ற வார்த்தைகளை கூறினார். சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த போது ஆள் மாறாட்டத்தால் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது விராட் கோலி பத்திரிகையாளர் ஒருவரை அவதூறாக பேசினார். மேலும் ஐ.பி.எல். போட்டியின் போது விராட் கோலி, கவுதம் காம்பிரோடு தகராறு செய்துள்ளார். சிகார் தவானுடனும் விராட் கோலி தகராறில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது.

விராட் கோலி அடிக்கடி கோபம் அடைவது பற்றி விளையாட்டுதுறை உளவியல் நிபுணர் பி.பி. பாம் கூறியதாவது,  தன்னுடைய ரசிகர்களின் நலன் கருதியும் இந்திய கிரிக்கெட் மற்றும் இந்த விளையாட்டின் நலனுக்காகவும் விராட் கோலி தன் உணர்ச்சியை கட்டுப்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். எதிர்பாராத ஒரு சம்பவத்தால் விராட் கோலி நீக்கப்பட்டால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படும். அவர் கிரிக்கெட் விளையாட்டின் தூதுவராக உள்ளார். மேலும் அபூர்வ திறமை பெற்றவராகவும் உள்ளார். இவ்வாறு தொடர்ந்து தன்னுடைய உணர்ச்சியை கட்டுப்படுத்தி கொள்ளாமல் தான் நடந்து கொண்டால் மக்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை விராட் கோலி உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து