Idhayam Matrimony

நடுவானில் திடீர் பழுது: ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசர தரையிறக்கம்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2025      இந்தியா
Air-India 2024 08 18

கொச்சி, நடுவானில் திடீர் பழுது காரணமாக ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்த விமானி, உடனடியாக அவசரமாக தரையிறக்க விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.

உரிய அனுமதி கிடைத்ததும் விமானம், கொச்சி ஏர்போர்ட்டில் அவசர அவசரமாக  தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கோளாறை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள், “ பழுது காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்குவது குறித்த தகவல் கிடைத்தவுடன் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. காலை 9.07 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை ஆய்வு செய்ததில், விமானத்தின் வலது பக்கம் உள்ள இரு டயர்களும் வெடித்துள்ளன” என்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து