முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் பலி: மத்திய அரசு

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 26 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்ற இந்தியர்கள் சட்டவிரோதமாகச் சேர்க்கப்படுகிறார்களா? என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சாகேத் கோகலே மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்விக்கு, நேற்று (டிச. 18) பதிலளித்த மத்திய வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ராணுவத்தில் மொத்தம் 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: “மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ரஷ்ய ராணுவத்தில் இருந்து 119 இந்தியர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர். மேலும், சுமார் 50 இந்தியர்கள் விடுவிக்கப்பட காத்திருகின்றனர்.

இந்தப் போரில், 26 இந்தியர்கள் கொல்லப்பட்டதுடன், 7 பேர் மாயமாகியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட 10 இந்திய வீரர்களின் உடல்கள் தூதரக அதிகாரிகளின் முயற்சியால் தாயகம் கொண்டு வரப்பட்டன.” எனக் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து