முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 20 பேர் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 28 மே 2015      உலகம்
Image Unavailable

பெய்ரூட் - சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக அங்கு இருதரப்பினர் இடையே சண்டைநடைபெற்று வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். சிரியாவில் பல்வேறு பகுதிகளை தீவிரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சமீபத்தில் முக்கிய நகரமான பாமிராவை தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில், தங்ககளுக்கு எதிராக செயல்படுவோரை தீவிரவாதிகள் கடுமையாக தண்டித்து வருகின்றனர். அந்தவகையில், அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட 20 பேரை தீவிரவாதிகள்  கைது செய்தனர். அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்த தீவிரவாதிகள், பாமிராவில் உள்ள 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ரோமானிய கலையரங்கம் முன்பு 20 பேரை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர்.

தண்டனை நிறைவேற்றும் முன்பு ரோமானிய கலையரங்கம் முன்பு திரண்டு வருமாறு தீவிரவாதிகள், பொதுமக்களை மிரட்டி வரவழைத்துள்ளனர். பொதுமக்கள் அங்கு வந்தபில் 20 பேருக்கு தண்டனை வழங்கியுள்ளனர். தங்களுக்கு எதிராக செயல்பட்டால் இதுபோ்னற கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதை உணர்த்தவே தீவிரவாதிகள் அவ்வாறு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தீவிரவாதிகள் இந்த செயலுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்து பாமிரா நகரை மீட்கும்  நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியுள்ளது. இருதரப்பினர் இடையே கடந்த ஒருவாரமாக நடந்த சண்டையில்  பொது மக்கள் 200 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து