முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை சீசனுக்கு இந்தாண்டு 294 சிறப்பு ரயில்கள்

ஞாயிற்றுக்கிழமை, 15 நவம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்: இந்த ஆண்டு சபரிமலை சீசனையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் 294 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. சபரிமலை சீசனையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடர்பாக திருவனந்தபுரத்தில் ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி, திருவனந்தபுரம் மண்டல மேலாளர் சுனில் பாஜ்பாய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், சபரிமலை சீசனுக்கு 294 சிறப்பு ரயில்களை இயக்குவதுடன், பயணிகள் வருகையைப் பொருத்து தேவைப்பட்டால் கூடுதல் ரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டதாக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இயக்கப்படும் ரயில்களில் 3700 படுக்கை வசதிளுடன் கூடுதல் பெட்டிகளை சேர்த்திருப்பதாகவும், கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மகரவிளக்கு நாள் நெருங்கும்போது முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதவிர பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள், பிரீ-பெய்டு ஆட்டோ மற்றும் டாக்சி போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்