முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் கடந்த 10 மாதங்களில் 270 யானைகள் மரணம்

திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரள மாநிலத்த்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடந்த பத்து மாதங்களில் மட்டும் 270 யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தத்துக்காக கொல்லப்பட்ட யானைகளைத் தவிர்த்து பிளாஸ்டிக் உறைகள் போன்ற பொருட்களை தின்றதாலும், மின்வேலியில் அடிப்பட்டு சில யானைகள் பலியானதாகவும் கேரள மாநில வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் கடந்த 2009-10-ல் 46 யானைகளின் உடல்களும், 2010-11-ல் 68 யானைகளின் பிரேதங்களும், 2011-12-ல் 53 யானைகளின் உடல்களும், 2012-13-ல் 47 யானைகளின் உடல்களும், 2013-14 ஆண்டுகளில் 35 யானைகளின் உடல்களும்கண்டெடுக்கப்பட்டன.கடந்த 2013-14 ஆண்டுகளில் அருகிலுள்ள வால்பாறை, அதிரப்பள்ளி, வழச்சல், இடமலியார், பூயம்குட்டி, இடுக்கு, மூனாறு வனப்பகுதிகளில் மட்டும் கடந்த பத்து மாதங்களில் 125 யானைகள் உயிரிழந்த நிலையில் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இந்நிலையில், கடந்த 2014-15 ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் இதுவரை 270 யானைகளின் உடல்கள் கிடைத்துள்ளதாக கேரள வனப்பாதுகாப்பு துறையின் கூடுதல் முதன்மை மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்