முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒவ்வொரு விஷயத்திலும் காங்கிரஸ் மதச்சாயம் பூசுகிறது : பா.ஜ.க குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - ஒவ்வொரு விஷயத்திலும் காங்கிரஸ் மதச்சாயம் பூசுகிறது என்று  பா.ஜ.க தேசிய செயலாளர் ஶ்ரீகாந்த் சர்மா குற்றம் சாட்டினார். ஶ்ரீகாந்த் சர்மா டெல்லியில் நேற்று கூறியதாவது, காங்கிரஸ் கட்சி கடந்த 60ஆண்டுகளாக என்ன செய்தது? அவர்கள் தலித்துக்கள் மற்றும் தலித் அல்லாதவர்களின் வாக்கு வங்கிகளை குறிவைத்தார்கள். அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மதச்சாயம் பூச பார்க்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது.  இது வேதனையை தருவதாகவும் உள்ளது. 2016ம் ஆண்டிலும் அவர்கள் மத விவகாரத்தை கையில் எடுக்கிறார்கள். இது ஒரு விதமான நிர்ப்பந்தமாக ஆகி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா சக்ரவர்த்தி  கடந்த 17ம் தேதியன்று பல்கலைக்கழக மாணவர் விடுதி அறையில் தற் கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் கூறுகையில், மத்திய அரசு தலித்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என குற்றம் சாட்டியது. இது குறித்து பா.ஜக தேசிய செயலாளர் ஶ்ரீகாந்த் சர்மா கூறுகையில், காங்கிரஸ் கட்சி சமூக பாதுகாப்பை கருத்தில் கொள்வதே  இல்லை. பா.ஜக அரசு சமூக பாதுகாப்பிற்காக பணியாற்றி வருகிறது. ஆனால்  அந்த நல்ல பணிகளின் வளர்ச்சியை விரும்பாத மக்களால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. 

உத்தரப்பிரதேசம், கர்நாடகம், அல்லது நாட்டின் இதர பகுதிகளில் நடக்கும் எந்த நிகழ்வுக்கும் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்யும்  பாஜக அரசையே குற்றம் சாட்டுகிறது.வாக்கு வங்கி அரசியலை நடத்தும் காங்கிரசார் மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவில் நடந்த வன்முறை குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?
உத்தரப்பிரதேசம், பீகார், ஆகிய மாநிலங்களில் உள்ள சட்ட ஒழுங்கு குறித்து காங்கிரஸ் கட்சியினர் மவுனம் செலுத்துகிறார்கள் ஆனால் அவர்கள் எல்லா விஷயங்களுக்கும் மத்திய அரசையே குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வாறு ஶ்ரீகாந்த் சர்மா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்