முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி.யின் டி-20 பேட்டிங் சராசரியில் விராட்கோலிக்கு முதலிடம்

புதன்கிழமை, 27 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்ட் - ஐ.சி.சி.யின் டி-20 போட்டிக்கான பேட்டிங் சராசரியில் இந்தியாவின் விராட்கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் சிறப்பாக ஆடி 90 ரன்களைக் குவித்ததன் மூலம் அவர் முதலிடத்தை பிடித்துள்ளார். அந்த போட்டியில் 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்களைக் குவித்தார் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசியின் டி-20 போட்டிகளுக்கான விராட் கோலியின் பேட்டிங் சராசரி 48.08 ஆகும். இதுகுறித்து ஐசிசியின் டிவிட்டில், அடிலெய்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் பேட்டிங் சராசரியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் விராட்கோலி என்று கூறப்பட்டுள்ளது.

டி-20 போட்டிகளில் இந்திய வீரர்களிலேயே அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் இருப்பவர் விராட்கோலிதான். அதாவது 31 போட்டிகளில் 1106 ரன்களை அவர் குவித்துள்ளார். கோலி அடிலெய்டில் எடுத்த 90 ரன்கள் இவருக்கு 10-வது அரை சதமாகும். டி-20 போட்டிகளில் 2010 முதல் கோலி ஆடி வருகிறார். ஜிம்பாப்வே அணியுடன் நடந்த போட்டிதான் அவருக்கு முதல் போட்டியாகும். பேட்டிங் சராசரியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் 40 சராசரியுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். 3- வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் பாப் டுபிளஸிஸ் 39.28 சராசரியுடன் உள்ளார். 4-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜேபி டுமினி (38.20) உள்ளார். 5-வது இடம் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸிக்குக் கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்