முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் தீவிரவாதி என குற்றம்சாட்டப்பட்ட உய்குர் தலைவருக்கு இந்தியா விசா மறுப்பு

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

புதுடெல்லி  - உய்குர் தலைவர் துல்குன் இசா தர்மசாலாவிற்கு செல்ல இந்தியா விசாவழங்க மறுத்துவிட்டது என்று வெளியுறவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐ.நா.வில் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி மசூர் அசாருக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை சீனா முடக்கியது.  இந்நிலையில் சீனாவில் தீவிரவாதி என்று குற்றம்சாட்டப்பட்ட சர்வதேச உய்குர் கூட்டமைப்பு  தலைவர் துல்குன் இசாவுக்கு இந்தியா நுழைவு விசா வழங்கியது. திபெத் பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா பங்குபெறும் சர்வதேச ஜனநாயக மாநாடு தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.

ஜெர்மனியில் உள்ள துல்குன் இசாவும் மாநாட்டில் பங்கேற்பதற்காக விசா கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்தார். இதனைப் பரிசீலித்த வெளியுறவு அமைச்சகம் அவர் இந்தியாவுக்கு வர அனுமதி அளித்தது.  சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கும் - ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம். சீனாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட உய்குர் மக்களை துல்குன் இசா தூண்டிவிடுவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியா விசா வழங்கிய விவகாரம் சீனா மற்றும் இந்தியா இடையே இருதரப்பு வாதத்திற்கு வழிவகைசெய்யும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளவர் துல்குன் இசா.

அவரை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நாட்டின் பொறுப்பு, என்று சீனா கூறியது. துல்குன் இசாவிற்கு எதிராக சீனா சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உய்குர் தலைவர் துல்குன் இசா தர்மசாலாவிற்கு செல்ல இந்தியா விசா வழங்க மறுத்துள்ளது என்று வெளியுறவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நிலவிவந்த குழப்பத்தை துல்குன் இசா முடிவுக்கு கொண்டு வந்துஉள்ளார். 

இதுதொடர்பாக ஆங்கிலப் பத்திரிக்கைக்கு பெர்லினில் இருந்து இசா அளித்து உள்ள பேட்டியில் உண்மையாகவே இந்தியாவிற்கு வர மிகவும் விரும்பினேன். கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி விடுக்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டது என்ற செய்தி தாங்கிய இ-மெயில் சனிக்கிழமை வந்தது. விசா ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்திய அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் இந்த முடிவை என்னிடம் தெரிவிக்க தொடர்பு கொள்ளவில்லை. இது எங்களுக்கு மிகவும் துன்பம் நிறைந்த சூழ்நிலையாகும், என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்