முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மாணவி கற்பழித்து கொலை : குற்றவாளியின் வரைபடம் வெளியீடு

புதன்கிழமை, 4 மே 2016      இந்தியா
Image Unavailable

கொச்சி : கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் வரைபடத்தை போலீசார் நேற்று வெளியிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாவூரை சேர்ந்த ஜிஷா (30) என்ற தலித் சமூகத்தை சேர்ந்த   சட்டக்கலூரி மாணவி கடந்த 6 நாட்களுக்கு முன், அவரது வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 30 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது என்றும், அவரது மார்பகம் மற்றும் மர்ம உறுப்பில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டு உள்ளது. ஜிஷா கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை பிடித்துள்ளனர். ஆனால் அவர்கள் தான் ஜிஷாவை கொலை செய்தார்களா என்பது தெரியவில்லை. விசாரணை குறித்த தகவல்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். போலீசார் குற்றவாளியின்  வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதனை நேற்று வெளியிட்டனர்.

ஜிஷாவின் கொலை குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி  நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். ஜிஷா கொலையை கண்டித்து மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் கண்டன பேரணி நடத்தினர். இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான கேரள மாநில ஆணையம் தானாக முன்வந்து ஜிஷா விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

மாநில மனித உரிமை ஆணையமும் தானாக முன் வந்து ஜிஷா கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் ஜிஷா வழக்கு விசாரணையை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்குமாறும் அது வலியுறுத்தியுள்ளது. சட்டக்கல்லூரி மாணவி கடந்த 1 வருடமாக தனக்கு சிலர் தொல்லை கொடுத்து வருவதாக போலீசில் தெரிவித்தும் போலீசார் அந்த புகாரை கண்டுகொள்ளவில்லை என அவரது தாயார் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். இந்த நிலைஅ மாணவியின் குடுமபத்திற்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்