முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : மாணவர்கள் உட்பட 10 பேர் பலி

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

காபூல்  - ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 மாணவர்கள் உட்பட 10 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் எல்லையோரத்தில் அமெரிக்க பல்கலைகழகம் ஒன்று அமைந்துள்ளது. அதில் நேற்று நுழைந்த பயங்கரவாதிகள் வகுப்பறையில் அமர்திருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 7 மாணவர்கள் உட்பட 10 பேர் பலியாகினர். பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

9 மணி நேர போராட்டங்களுக்கு பிறகு 150 மாணவர்கள் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து ஆப்கன் உள்துறை செய்தி தொடர்பாளர் கூறும்போது, "வகுப்பறையின் ஜன்னல் வழியாக பயங்கரவாதிகள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 7 மாணவர்கள், 2 போலீஸார், ஒரு பாதுகாப்பு அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பாக எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் தாலிபன்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்