முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதியோர்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - மாநில அரசு நிதி உதவியுடன் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் பயனடையும் முதியோர்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் 300 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

சமூக நலத்துறை சார்பில் பின்வரும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1. சட்டத்திற்கு முரணாகச் செயல்பட்டதால், இளைஞர் நீதிக்குழுமங்கள் முன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்படாத நிகழ்வுகளில், அச்சிறார்களை தற்காலிகமாக தங்க வைக்கும் பொருட்டு, கூர்நோக்கு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது அரசால் 6 கூர்நோக்கு இல்லங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் 1 கூர்நோக்கு இல்லமும் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை கெல்லீஸ் சிறுவர்களுக்கான கூர்நோக்கு இல்ல கட்டிடம் பழுதடைந்துள்ள காரணத்தினால் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அனைத்து வசதிகளையும் கொண்ட 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு புதிய கட்டிடம் கட்டப்படும்.

இக்கட்டிடத்தில் தங்கும் அறைகள், சமையலறையுடன் கூடிய உணவு அருந்தும் கூடம், தொழிற்பயிற்சிக் கூடம் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட சிறார்களை நல்வழிப்படுத்துவதற்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும்இருக்கும். 2. மாநில அரசு நிதி உதவியுடன் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் பயனடையும் முதியோர்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் 300/- ரூபாயிலிருந்து 1200/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 3. சமூக நலத் துறையின் கீழ், சென்னை, கடலூர், தஞ்சாவூர், சேலம், சிவகங்கை,மதுரை, திருநெல்வேலி, பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 9 அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சேவை இல்லங்களில் தங்க ஆண்டு வருமான உச்சவரம்பு 24,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, இடை நிலை ஆசிரியைப் பயிற்சிக்கான மாணவியர் சேர்க்கைமற்றும் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களிலும் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு 24,000/- ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு 24,000/- ரூபாயிலிருந்து 72,000/-ரூபாயாக உயந்த்தப்படும். இதன் காரணமாக இத்திட்டங்களினால் அதிக பயனாளிகள் பயனடைவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்