முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் பயங்கரவாத நாடு - அமெரிக்கா கையெழுத்து வேட்டை

செவ்வாய்க்கிழமை, 4 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்காவில் கையெழுத்து வேட்டை நடந்து வருகிறது. இதற்கு அங்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் பாகிஸ்தானை, ‘பயங்கரவாத நாடு’ என அமெரிக்கா அறிவிக்க வலியுறுத்தி அங்கு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. ‘ஆர்.ஜி.’ என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் கடந்த 21-ம் தேதி இதற்கான புகாரை தயாரித்து வெளியிட்டார்.

இந்த புகாருக்கு அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. புகார் தயாரிக்கப்பட்ட 2 வாரங்களுக்குள்ளாகவே 5 லட்சம் பேரின் கையெழுத்தை அது பெற்று விட்டது. வருகிற 21-ம் தேதி வரை கால வரையறை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், அதற்குள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் கையெழுத்தை எளிதாக பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற புகார்கள் 1 லட்சம் பேரின் கையெழுத்தை பெற்றாலே அது குறித்து 30 நாட்களுக்குள் வெள்ளை மாளிகை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும். அந்தவகையில் இந்த புகார் மீது ஒபாமா நிர்வாகம் விரைவில் பதிலளிக்கும் என தெரிகிறது. இதைப்போல பயங்கரவாத பாகிஸ்தானை வன்மையாக கண்டிக்க வலியுறுத்தி இங்கிலாந்திலும் கையெழுத்து வேட்டை நடத்தப்படுகிறது. இதற்காக தயாரிக்கப்பட்ட புகார் 10 ஆயிரம் கையெழுத்தை பெற்று விட்ட நிலையில், இது குறித்து பாராளுமன்ற பொதுச்சபையில் விவாதம் நடத்தப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago