எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது. இதில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா 7-3, 2-7, 7-5, 7-1 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ கா யிக்கு அதிர்ச்சி அளித்தார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங் 7-1, 7-4, 7-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் லாவை வீழ்த்தினார். 3-வது ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் 7-2, 7-2, 7-5 என்ற செட் கணக்கில் ஹோ டோமாட்டோ ஹோவை மடக்கினார். முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் கடைசி ஆட்டத்தில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் களம் இறங்க அவசியம் இல்லாமல் போய் விட்டது.
முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியா, இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையையும் பெற்றது. இந்த வெற்றி, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் ஸ்குவாஷ் போட்டியில் சாதிப்பதற்கு இந்தியாவுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில் உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அதில், உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, அபய்சிங், அனாஹத் சிங், வேலவன் செந்தில்குமார் ஆகியோர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அவர்களின் வெற்றி முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது. இந்திய ஸ்குவாஷ் அணியின் வெற்றி நமது நாட்டை பெருமைப்படுத்தி இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
சாதனை படைத்த அபிஷேக் சர்மா
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே சிக்சரை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இன்னிங்சின் முதல் பந்தில் 3 முறை சிக்ஸர் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரோகித், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒருமுறை முதல் பந்தில் சிக்சர் பறக்கவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருண் சக்கரவர்த்தி புதிய மைல்கல்
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டியில் வருண் சக்கரவர்த்தி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
32 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி இந்த மைல்கல்லை அதிவேகமாக தொட்ட 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வென்ற சென்னை மாணவி
தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் இரு நாட்கள் நடந்தது. இதில் 8 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பிரிவில் சென்னை மாணவி மணிகா தன்டோல், பீம் பிரிவில் தங்கப்பதக்கமும், புளோர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். 7 வயதான மணிகா பவன் ராஜாஜி வித்யாஷரம் பள்ளியில் படித்து வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


