எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன? என்ற தலைப்புடன் வெறும் இரண்டு கண்கள் மட்டுமே உள்ள எமோஜிகளை சேர்த்து வார்த்தை விளையாட்டு பதிவிட்டுள்ளார்.
அதிக தொகைக்கு ஏலம்...
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் இன்று (16-ம் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இந்நிலையில் இந்த ஏலம் குறித்தும், ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய வீரர்கள் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஏலம் குறித்து அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறார்.
வார்த்தை விளையாட்டு....
இந்நிலையில் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன? என்ற தலைப்புடன் வெறும் இரண்டு கண்கள் மட்டுமே உள்ள எமோஜிகளை சேர்த்து பதிவிட்டிருந்தார். ஐ.பி.எல். ஏலம் நெருங்குகின்ற வேளையில் அஸ்வின் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. அந்த வகையில் அஸ்வின் பதிவிட்டுள்ளது புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டு என்பது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே இதபோன்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேசன் ஹோல்டர்...
அதாவது ‘ஜேசன் சஞ்சய்’ பெயரிலிருந்து ‘ஜேசன்’ மற்றும் ‘பல்பு ஹோல்டர்’என்ற வார்த்தையிலிருந்து ‘ஹோல்டர்’ இரண்டையும் இணைத்து ‘ஜேசன் ஹோல்டர்’ என்ற வென்ஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரை குறிப்பால் உணர்த்தியுள்ளார். இன்று நடைபெற உள்ள மினி ஏலத்தில் இவர் கவனிக்கக்கூடிய வீரராக இருப்பார் என்பதை அஸ்வின் இந்த பதிவின் மூலம் உணர்த்தியுள்ளார். ஹோல்டர் ஏலப்பட்டியலில் அடிப்படை விலை ரூ. 2 கோடி பிரிவில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


