எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஊரக வேலைத் திட்ட பணி நாட்களாக 125 நாட்களாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.
வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீட்டை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 90 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்கிவரும் நிலையில் 60 சதவீதம் -ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நிதி பங்களிப்பு 10 சதவீதம் இல் இருந்து 40 சதவீதம் ஆக உயர்வதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
100 நாள் வேலைக்கான பணிகளை தேர்வு செய்வதற்கான வரைமுறையை மத்திய அரசு முடிவுசெய்யும் எனவும் மத்திய அரசின் வரைமுறைகளுக்கு உட்பட்டே மாநில அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளன. மேலும் விவசாய அறுவடை காலத்தில் 60 நாட்களுக்கு ஊரக வேலைத் திட்டத்தில் பணிகளைக் குறைக்கக் கூடாது எனவும் ஊரக வேலைத் திட்ட பணி நாட்களாக 125 நாட்களாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


