எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
4 நாட்கள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் சென்றார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், தற்போது ஜோர்டான் விமான நிலையம் சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து ஜோர்டான் மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். ஜோர்டான் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி நாளை எத்தியோப்பியா செல்கிறார்.
எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அங்கும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து ஓமன் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் ஹைதம் பின் தாரிக்கை சந்திக்கிறார். அந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


