முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2025      உலகம்
England--2025-12-15

லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. 

சுற்றுப்பயணம்....

இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அணியில் ஜோஸ்... 

இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. 2-வது போட்டியில் விளையாடிய கஸ் அட்கின்சனுக்கு பதிலாக ஜோஸ் டங் அணியில் இடம் பிடித்துள்ளார். மற்றப்படி எந்த மாற்றமும் இல்லை. 3-வது போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால் தொடரை இழந்துவிடும் நிலையில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

இங்கிலாந்து அணி:

க்ராலி, டக்கெட், போப், ரூட், ப்ரூக், ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கார்ஸ், ஆர்ச்சர், ஜோஷ் டோங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து