முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா?

புதன்கிழமை, 23 நவம்பர் 2016      மருத்துவ பூமி
Image Unavailable

அனைவருக்கு பிடித்த ஒன்றான நெல்லிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான்.

ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.
முதுமையை தடுக்கும். நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, இளமையுடன் காட்சியளிக்கும். குறிப்பாக மிருதுவான, பொலிவுடன் கூடிய சருமத்தை பெறலாம்.

கருமை திட்டுக்கள்:  ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.

அழகான உடல் வடிவம்:  அழகைக் கெடுக்கும் வகையில் உடல் எடை அதிகமாக உள்ளதா? அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும்.  இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

ஆரோக்கியமான கூந்தல்:  நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது.  அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.

மேலும் நரைமுடி, பொடுகு போன்ற தொல்லைகளுக்கும் சிறந்த நிவாரணத்தை பெறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago