கலசலிங்கம் தொழில் நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் திறன் வளர்ச்சி பயிற்சி

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      திருநெல்வேலி

செங்கோட்டை,

 

ஸ்ரீவி. கலசலிங்கம் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் கணிப்பொறி அறிவியல் துறை சார்பில் 3 நாட்கள் ரிசர்ச் வழிமுறைகள் மற்றும் லேட்டக்ஸ் கணினி மென்பொருள்பற்றி ஆசிரியர் திறன் வளர்ச்சி பயிற்சி கலசலிங்கம் பல்கலை வேந்தர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.இயக்குநர் எஸ். சசிஆனந்த் வாழ்த்துரை வழங்கினார்.

 

சிறப்பு விருந்தினராக எஸ். ஆறுமுகம் டீன் ஆர் ரூ டி, கலசலிங்கம் பல்கலைக்கழகம் கலந்துகொண்டு பேசினார்.கல்லூரி முதல்வர் எஸ். ஹரிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் வினோலின் ஜேப்ஸ், மெப்கோ கல்லூரி பேராசிரியர்கள் கவிப்பிரியா, ராஜேஷ் ஆகியோர் ஆராய்ச்சி முறைகள் பற்றி பேசினார்கள்.

 

கலசலிங்கம் தொழிற்நுட்பக்கல்லூரி பேராசிரியை விஜயா லேட்டஸ் கணினிமென்பொருள்பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் பேசினார்நிறைவு விழாவில்; கலசலிங்கம் பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் பி. ஜி குருசாமிபாண்டியன் சான்றிதழ்கள் வழங்கினார்.கணினித்துறைத் தலைவர் ஜி. விஜயா வரவேற்புரையாற்றினார்.ஆர். ஆனந்த குமார் மற்றும் ஜெ. பெஸ்கி ராஜா, விழா ஏற்பாடினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: