நீலகிரி `ஏ’ டிவிஷன் கால்பந்து போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      நீலகிரி

நீலகிரி ஏ டிவிஷன் கால்பந்து போட்டிகள் எடப்பள்ளி கிராமத்தில் வரும் 31_ந் தேதி நடக்கிறது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தாண்டு ஏ டிவிஷன் போட்டிகள் எடப்பள்ளி கிராமத்தில் உள்ள மைதானத்தில் வரும் 31_ந் தேதி முதல் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பி.எம்.எஸ்.சி லெவன்த் ஸ்டார், யங் பட்ஸ், ஹார்வெஸ்டர்ஸ், ஸ்போட்டிங் யூனியன், யுனைடெட் எப்.சி இளைய பாரதம், நீலகிரி சேலஞ்சர்ஸ், பாரதியார், ஓரியண்டல் ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

இப்போட்டிக்கான ஏற்பாடுகள் மாவட்ட கால்பந்து சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: