கொங்கு கல்லூரியில் வளாகத் தேர்வு 83 பேருக்கு பணி நியமன ஆணை

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      ஈரோடு

26-ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தேர்வில் 83 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பாரதியார் பல்கலைக்கழகம், கொங்கு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சார்பில் இம்முகாம் நடைபெற்றது. இன்போசிஸ் பிபிஓ நிறுவனத்தைச் சார்ந்த மனிதவள பிரிவு உயர் அதிகாரிகள் இம்முகாமில் பங்கேற்று வளாகத் தேர்வை நடத்தினர்.

இதில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 33 கல்லூரிகளில் இருந்து சுமார் 1,200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், கொங்கு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் 23 பேர் உள்பட மொத்தம் 83 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பணி நியமன ஆணையை கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ வழங்கினார். கல்லூரி முதல்வர் என்.ராமன் முன்னிலை வகித்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு, பயிற்சி அலுவலர் கே.கே.சுரேஷ்குமார் செய்திருந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: