திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      திருவள்ளூர்
Tvallu photo1

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார். மேலும் இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 91 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் 84 மனுக்களும், சமூக நலத்திட்டம் 11 மனுக்களும், குடும்ப அட்டை 60 மனுக்களும், ஆதிதிராவிடர் ஃ பிற்படுத்தப்பட்டோர் நலம் 05 மனுக்களும், வேலைவாய்ப்பு 03 மனுக்களும், உரிமம் 02 மனுக்களும், சட்டம் மற்றும் ஒழுங்கு 09 மனுக்களும், ஊரக ஃ நகர்புற வளர்ச்சி 18 மனுக்களும், கடனுதவி 07 மனுக்களும், வேளாண்மை ஃ கால்நடைத்துறை ஃ மீன்வளம் 10 மனுக்களும், இதரதுறை 32 மனுக்களும், கல்வி 03 மனுக்களும், பேரிடர் 33 மனுக்களும், சான்றிதழ் 09 மனுக்களும், சான்றிதழ் நகல் 01 மனுவும், அடிப்படை தேவை ஃ போக்குவரத்து ஃ சுகாதாரம் 04 மனுக்களும் என மொத்தம் 382 மனுக்கள் பெறப்பட்டது.இம்மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளவும், பயனாளிகளுக்கு உதவிடும் வகையில் விரைந்து பரிசீலிக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பாக, 5 ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு 10ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் பல்வேறு பாடங்களில் முதன்மை மதிப்பெண்கள் பெற்றதற்காக (மொத்தம் ரூ.11,000ஃ-த்திற்கான) பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பாக, 20 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும் (ஒரு தையல் இயந்திரம் விலைரூ.3,386ஃ-), 12 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பாக, 7 பயனாளிகளுக்கு வங்கிக்கடன் மற்றும் கல்வி உதவித்தொகைகளையும், மாவட்ட கலெக்டர்; வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ட்டி.ஆர்.மல்லிகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.ஷர்மிளி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சு.சிவகாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: