தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      விழுப்புரம்
25ggp02

செஞ்சி,

 

தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்தி முகாம் வெள்ளிஅன்று செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

 

திண்டிவனம் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படையின் சார்பாக 118 தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் வழிகாட்டுதலின் பேரில் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் ஞானஜோதி அறிவுரையின் பேரில் நடைபெற்றது. ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ந.அறிவுடைநம்பி தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திண்டிவனம் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படையின் ஒருங்கிணைப்பாளர் ஜி.டி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். காடுகளை பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் செஞ்சி வனச்சரக அலுவலர் பெரியண்ணன், வன அலுவலர் ரவி, விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பழனி, ஈஷாயோகா பயிற்சியாளர் வீரமணி, கர்ணன், செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரகாந்தி, குமரவேல், கண்ணன்,நெடுஞ்செழியன் உள்ளிட்ட 118 பள்ளிகளை சேர்ந்த தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: