சோழிங்கநல்லூர் வட்டம் வர்தா புயலால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு 3 பேருக்கு தலா ரூ.4 இலட்சம் வீதம் 12 இலட்சத்திற்கான நிதியுதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கஜலட்சுமி வழங்கினார்

kanchi

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் வட்டத்தில் வர்தா புயலால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 3 பேருக்கு தலா ரூ.4 இலட்சம் வீதம் 12 இலட்சத்திற்கான நிதியுதவி காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி வழங்கினார். வர்தா புயலினால் உயிரிழந்த சோழிங்கநல்லூர் வட்டத்திலுள்ள நங்கநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (வயது 41) என்பவரின் மனைவி பானுமதியிடம் ரூ.4 இலட்சமும், பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த ஹரீஸ் (வயது 4) என்ற சிறுவனின் தாயார் லஷ்மிக்கு ரூ.4 இலட்சமும், பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த உயிரிந்த அமனானுல்லா (வயது 42) என்பவரின் மனைவியிடம் ரூ.4 இலட்சம் என மொத்தம் 12 இலட்சத்திற்கான நிதியுதவி காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி வழங்கினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ