முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      இந்தியா
DMK-Offces 2023 03 31

புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) இன்று (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை செய்வது சிரமம். எனவே கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். இப்போது இதை செய்வது சரியானது அல்ல என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின. ஆனாலும் தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஜனநாயக, சட்டவிரோாத எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில்  நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராக கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது என நேற்று முன்தினம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்த நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து