முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      தமிழகம்
election 2025-01-06

சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

வாக்காளர் படியலில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. பல வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் உள்ளன. எனவே தகுதியான வாக்காளர்களை மட்டுமே பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து உள்ளது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையுடன் அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர்கள் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை ஒத்திவைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:- தமிழகத்தில் 2002 மற்றும் 2005- ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்க உள்ளது. இந்த பட்டியல்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் உள்ளன. இந்த பட்டியல்களுடன் அனைத்து வீடுகளுக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லப்போவது இல்லை. எந்தெந்த வீடுகளில் 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதோ அந்த வீடுகளுக்கு மட்டுமே செல்வார்கள்.

அந்த வீடுகளில் யாராவது இருந்தால் அவர்களின் விவரத்தை கேட்டு வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவார்கள். அந்த வீட்டில் 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால் அதற்குரிய விண்ணப்படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தை வழங்குவார்கள். அவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தரவேண்டியது அவசியம் இல்லை. அடுத்த முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும்போது ஆவணங்களுடன் அவற்றை சமர்பித்தால் போதும் இதற்காக ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு வீட்டிற்கு 3 முறை வருவார்கள்.

கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களை காட்டி டிசம்பர் 9-ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம். முகவரி மாற்றம் எதுவும் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது. முகவரி மாறியவர்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் அதற்கான ஆவணங்களை டிசம்பர் 7-ந்தேதி முதல் ஜனவரி 3-ந்தேதிக்குள் சமர்ப்பித்து தங்களது பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து