Idhayam Matrimony

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்

வருகிற நவம்பர் 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி இந்த விதிமுறைகளை வகுக்க அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற வருகிற நவம்பர் 6 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பாராளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து