Idhayam Matrimony

சுய தொழில் தொடங்க பயிற்சி முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      நீலகிரி

 

சுய தொழில் தொடங்க முன்னாள் படைவீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

 

செயல் திறன் பயிற்சி

 

முன்னாள் படைவீரர்களுக்கு அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறும் நோக்குடனும், சுயதொழில் தொடங்க பயிற்சி அளித்திடவும் முடிவு செய்து ஓட்டுநர் பயிற்சி, கணினி பழுதுபார்த்தல் பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற செயல் திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் வழங்கி வருகிறது.

 

டெக்ஸ்கோ நிறுவனம்

 

இப்பயிற்சிகளுக்கு வரும் முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணமின்றி தங்குமிடம், உணவு ஆகியவை அளிக்கப்படும். பயிற்சிக்குரிய கட்டணத்தையும் டெக்ஸ்கோ நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சியினை அரசு மற்றும் பொது நிறுவனங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் வழியாக டெக்ஸ்கோ நடைமுறைப்படுத்தி வருகிறது.

 

எனவே கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும் இப்பயிற்சிகளில் தங்களுக்கு விருப்பமான பயிற்சியில் சேர்ந்து பயனடைய அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக மேலாளரை தபால் மூலமாகவோ அல்லது சிடீஞ்ஷச்ஹஹஷசிஙூ/கிஙிஹடுங்.ஷச்ஙி என்ற மின் அஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago