முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் ரயில் பாலத்தில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய தூக்குபாலம் - ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,டிச,27: பாம்பன் ரயில் பாலத்தில் ரூ.40 கோடி மதிப்பில் புதியதாக தூக்குபாலம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்கப்படும் என பாம்பன் ரயில் பாலத்தின் உறுதி தந்மை குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்த தென்னக ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் நேற்று தெரிவித்தார்.

ராமாநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் வகையில் 2.5 கி.மீட்டர் தொலைதூரத்தில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. .இந்தப்பாலத்தில் கப்பல் கடந்து செல்லும் வகையில் 200 அடி நீளத்தில் 836 டன் எடையில் தூக்கு பாலம் இரு பிரிவாக மேல்நோக்கி திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தூக்கு பாலம் அமைக்கப்ப்டடு 100 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் கடல் காற்றின் அரிப்பு ஏற்ப்டடு தன்மை இழந்து வந்ததால் தூக்கு பாலத்தின் வலுவை அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் 6 டன் எடையளவி்ல் பாலத்தின் வலுவை அதிகப்படுத்தும் வகையில் தூக்குபாலத்தில் இரும்பு பட்டைகள் பொருத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தென்னக ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் பாம்பன் ரயில் நிலையத்திற்கு நேற்று வருகை தந்து பின்னர் அங்கிருந்து ட்ராலி மூலம் ரயில் பாலத்திற்கு சென்றார்.அங்கு ரயில் தூக்குப்பாலத்தில் ரயில் செல்லும்போது அதன் அதிர்வுத்தன்மை குறித்து பொறியாளர் சுயம்பு லிங்கம் ஆய்வு செய்தார்.அதன பின்னர் பாலத்தில் பொறுத்தப்பட்டிருந்த பாலம் முழு திறன் ஆய்வு கருவில் பதிவான அதிர்வின் அளவு குறித்து பார்வையிட்டார்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பொறியாளர் சுயம்புலிங்கம் தெரிவித்தது.  பாம்பன் ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூக்கும் பாலத்தில் வலு 6 டன் வரை அதிகரிக்கப்பட்டுள்ள.மேலும் 1 டன் எடையளவு இரும்பு பட்டைகள் பொருத்தப்படவுள்ளது.தூக்கு பாலத்தில் ரயில் கடந்து செல்லும்போது அதன் அதிரிவுத்தன்மையை அறிய தூக்கு பாலத்தில் 14 இடங்களில் பாலம் முழு திறன் ஆய்வு கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் தூக்கு பாலத்தின் அதிர்வுகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்டறிந்து அதன் பின்னர் எந்த பகுதியில் கடல் காற்றால் அரிப்பு தன்மை ஏற்பட்டு வலு குறைந்துள்ளதோ அப்பகுதியில் கூடுதலாக இரும்பு பட்டைகள் பொருத்தும் நடைபெற்று வருகிறது.

பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூத்து பாலத்தை மாற்றி ரூ.40 கோடி மதிப்பில் புதிய தூக்குபாலம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் எனவும், ஒரு பகுதியாக மேல் நோக்கி திறக்கும் வகையிலும்,எலக்ட்ரானிக் மற்றும் மின்சாரம் இல்லாதபோது ஊழியர்கள் திறக்கும் வையிலும் அமைக்கப்படும் எனவும்,இந்த பாலம் இங்கிலாந்து நாட்டிலுருந்து வலு திறன் கொண்ட அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டது என தெரிவித்தார்.மேலும் பணிகள் நடைபெறும்போது பாலத்தில் 15 நாட்கள் மட்டும் ரயில் போக்குவரத்து பாலத்தில் நிறுத்தப்படும் எனவும்,அனைத்து ரயில்களும் மண்டபம் பகுதியிலிருந்து இயக்கப்படும் எனுவம்,ராமேசுவரம் பகுதி்ககு ரயிலில் வரும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக மண்டபம் ரயில்நிலையத்திலிருந்து வாகனம் இயக்கப்படும் என தெரிவித்தார்.

இப்பணிகள் நடைபெற்று முடிந்தவுடன் மின்சார இணைப்பில் ரயில் இயக்க முடியும்,100 ஆண்டுகளுக்கு கடல் காற்றால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.மேலும் பாலத்தில் தூக்குப்பாலம் பணிகல் மற்றும் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணிகள் முடிவடைந்ததவுடன் பாலத்தில் தற்போது 15 முதல் 45 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வரும் ரயில்களை 75 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago