கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து வசதி: எம்.பி, எம்.எல்.ஏ துவக்கி வைத்தனர்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      கடலூர்
27KP3FO

கள்ளக்குறிச்சி,

 

கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி மாணவர்கள் கல்லூரி செல்வதற்காக அரசு பேருந்தினை கல்லூரி வளாகத்தில் எம்.பி, எம்.எல்.ஏ துவக்கி வைத்தனர்.

 

கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூர் எல்லையில் அரசு கல்லூரி இயங்கி வருகின்றது. மாணவர்கள் கல்லூரி செல்வதற்கு பேதிய பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்று வந்தனர். இது குறித்து காமராஜ் எம்.பி, பிரபு எம்.எல.ஏவிடம் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் முறையிட்டனர். அதன் பேரில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 9.30, 9.45, 9.50க்கு 3 பேருந்துகளும், மாலை கல்லூரி முடிந்து 4.30, 4.35 கல்லூரியில் இருந்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு செல்கின்றது. மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று இப் பேருந்துகளை காமராஜ் எம்.பி, அ.பிரபு எம்.எல்.ஏ கல்லூரி வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

 

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் இராஜசேகர், ரங்கன், பால்ராஜ், சீனுவாசன், புன்னியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், கல்லூரியின் பேராசிரியர்கள் சங்கீதா, வீரலட்சுமி, சங்கர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரத்தை சேர்ந்த பனிமனை மேலாளர்கள் சிவசங்கரன், அண்ணாமலை, குமரசேன், அரசு பேருந்து ஓட்டுநர்கள், கட்சித் தொண்டர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: