திருவள்ளுர் மாவட்டத்தில் 949 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் விழா

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      திருவள்ளூர்
Tvallur photo1

திருவள்ளுர் மாவட்டத்தில் 949 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 77 லட்சத்தி 25 ஆயிரத்திற்கான திருமண உதவித்தொகையும், 3796 கிராம் (369சவரன்) தங்கத்தினை பள்ளிக் கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் ஆகியோர் வழங்கினார்கள்.

 

பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 246 பயனாளிகளுக்கு 73 லட்த்திற்கான உதவித்தொகையும், 984 கிராம் (123 சவரன்) தங்கத்தையும் மாவட்ட கலெக்டர் மற்றும் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர், பொன்னேரி, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 354 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 57லட்சத்தி 25 ஆயிரத்திற்கான திருமண உதவித்தொகையும், 1416 கிராம் (177 சவரன்) தங்கத்தையும் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் , ஊரகத் தொழில் துறை அமைச்சர் , மாவட்ட கலெக்டர் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவள்ளுர், பூண்டி, கடம்பத்தூர் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 349 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 47லட்சத்திற்கான திருமண உதவித்தொகையும், 1396 கிராம் (174.50 சவரன்) தங்கத்தையும் மாவட்ட கலெக்டர் மற்றும் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர், பொன்னேரி, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.

 

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி, திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பி.வேணுகோபால், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.பலராமன் (பொன்னேரி), டி.ஏ.ஏழுமலை (பூவிருந்தவல்லி),திருவள்ளுர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.சந்திரசேகர்,திருவள்ளர் மாவட்ட மொத்த கூட்டுறவு சங்க தலைவர் ஜி.கந்தசாமி,பூண்டி ஒன்றிய கழக செயலாளர் கந்தசாமி, மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) இரா.ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: