நீடாமங்கலத்தில் ஜி.கே.வாசன் 52வது பிறந்தநாள் அபிஷேகம்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      திருச்சி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயிலில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் 52வது பிறந்தநாளையட்டி அக்கட்சியின் மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன் தலைமையில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாவட்ட பொதுச்செயலாளர் ராமஅசோகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜாராமன்,வட்டார தலைவர்கள் மேற்கு சந்திரசேகரன்,கிழக்கு ராஜேந்திரன்,நீடாமங்கலம் நகர தலைவர் ராஜன்ரமேஷ்,முன்னாள் ஒன்றியகுழு தலைவர் கமால்தீன்,வடுவூர் சங்கர் உள்ளிட்ட வட்டார,நகர,கிளை பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மாரியம்மன் கோயிலில் உள்ள பிரகார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: