முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தகிரியில் இலவச போட்டோ மற்றும் வீடியோ கிராப்பி பயிற்சி கலெக்டர் சங்கர் தகவல்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2016      நீலகிரி

கோத்தகிரியில் இலவச போட்டோ கிராப்பி மற்றும் வீடியோ கிராப்பி பயிற்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்று பயன்பெற்ற நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                                             21 நாட்கள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச போட்டோ கிராப்பி மற்றும் வீடியோ கிராப்பி பயிற்சி நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 4_ந் தேதி முதல் 31_ந் தேதி வரை 21 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 45 வரையாகும்.

                                        உபகரணங்கள்

இப்பயிற்சியின் போது பயிற்சிக்கான உபகரணங்கள், தேனீர், மதிய உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் தங்களது பெயர், முகவரி, கைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கோத்தகிரி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில்  நேரில் விண்ணப்பம் பெற்று சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

                                           வாய்ப்பு

இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு பயிற்சி மையத்தின் இயக்குநர் வசந்தகுமாரை 96296 3764, 04266 273051 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்