தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் பள்ளியில் புத்தாண்டு விழா

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      திருநெல்வேலி

தென்காசி,

தென்காசி எம்.கே.வி. கந்தசாமி நாடார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் சனிக்கிழமை, 31- ம் தேதியன்று காலை  10.30 மணிக்கு 10  மற்றும் 12  ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பள்ளி முதல்வர் அந்தோணி பால்ராஜ் தலைமை வகித்தார்.  கூட்டத்தின் ஆரம்பத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக புத்தாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புத்தாண்டை வரவேற்று பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களை கூறினர். பெற்றோர்களுக்கு புத்தாண்டு சிறப்பு விருந்து வழங்கப் பட்டது.  அச்சமயத்தில் பெற்றோர்கள் அவர்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.  அடுத்ததாக முதல்வர் மாணவர்கள் எவ்வாறு  பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது பற்றி விளக்கினார்.  கடைசியாக அரையாண்டு தேர்வின் முடிவுகள் பெற்றோர்களிடம் தெரிவிக்கப் பட்டது.  பெற்றோர்கள் எதிர்பாராத விதமாக புத்தாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பாக செய்திருந்த தாளாளர் பாலமுருகன், முதல்வர் மற்றும் ஆசிரியர்களை பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: