முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டு தரிசனத்துக்கு திருப்பதியில் குவிந்த பக்தர்கள்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : ஆங்கிலப்புத்தாண்டு தினமான நேற்றுதிருமலை ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆர்ஜித சேவை

ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். நேற்றுகாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ளனர். இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. இருப்பினும், ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், பரிந்துரை கடிதங்கள் மூலம் அனுமதிக்கப்படும் தரிசனம், ரூ.50 சுதர்சன டிக்கெட் தரிசனம், மூத்த குடிமக்கள், கைகுழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அதிகாலை 4 மணி முதல் ...

புரோட்டோகால் வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே தரிசனம் அனுமதிக்கப்படும். புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணி முதல் தர்மதரிசன பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பக்தர்களுக்கு 24 மணி நேரமும் உணவு, குடிநீர், டீ, காபி, பால் உள்ளிட்டவை வழங்கப்படும். திருமலை மலைப்பாதையில் 24 மணி நேரமும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, திருமலை முழுவதும் வண்ணமலர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்