முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியாகதுருகம் தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      கடலூர்

கள்ளக்குறிச்சி,

 

தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதியாரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு கலாமுக்கு ஒரு சலாம் நூல் ஆய்வுரை, 108வது இலக்கிய தொடர் சொற்பொழிவு தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

 

விழாவிற்கு எழுத்தாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கள்ளக்குறிச்சி ஆர்.சி.நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தகுமார், மனவளக்கலை மன்ற செயலாளர் வசந்தா முன்னிலை வகித்தனர். சங்க துணைச் செயலாளர் பக்கிரிசாமிதாஸ் வரவேற்றார்.

 

பாரதியின் பாஞ்சாலி சபதம் ஒரு பார்வை எனும் தலைப்பில் இராச.நடேசன், பாரதியார் ஆத்திச்சூடி கூறும் அறக்கருத்துக்கள் எனும் தலைப்பில் அரங்க.மின்னல், பாரதியின் கடிதங்கள் எனும் தலைப்பில் ஆசிரியை .பாரதிசிவநேசன், பாரதியின் குயில் பாட்டு ஒரு பண்முகப் பார்வை எனும் தலைப்பில் முத்தமிழ் முத்தன் பலரும் பேசினார்கள்.

 

தமிழரசி செந்தில்குமார் எழுதிய கலாமுக்கு ஒருசலாம் எனும் நூலினை பொன்.அறிவழகன், சங்கை திராவிடர் கழகத் தலைவர் சேரன் ஆய்வு செய்தனர்.மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தலைப்பில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கோமுகி.மணியன் பேசினார். கயமை திருக்குறள் அதிகாரத்திற்கு மாவட்ட முன்னாள் கல்வி அலுவலர் சயராமன் விளக்க உரையாற்றினார். பூட்டை பாண்டியன், வா.ச.கணேசனார் தமிழிசைப் பாடினார்கள். நூலாசிரியர் தமிழரசி ஏற்புரை ஆற்றினார். நெடுஞ்செழியன், அம்பிகாபதி, வெங்கடாசலபதி, குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

நிகழ்ச்சியில் சாரங்கபானி, சண்முகம், சிவப்பிரகாசம் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலரும் பங்கேற்றனர். முடிவில் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் துரைமுருகன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago