கரூர் அருகே அரசு பேருந்து சாலை விபத்து : அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      கரூர்
karur 1

கரூர் அருகே ஏற்பட்ட ஒரு சாலை விபத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்து காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

 

ஊட்டியிலிருந்து கரூர் வழியாக திருச்சி சென்ற அரசு பேருந்து கரூர் அருகே உள்ள புலியூர் பகுதியிலுள்ள மொடக்குசாலையை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள புளியமரத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பேருந்தின் நடத்துனர் ஊட்டி, குன்னூரை சேர்ந்த ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த 35க்கும் மேற்பட்டோர் கரூரிலுள்ள அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த அசோக் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். சம்பவம் அறிந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தனது சொந்த காரில் பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். விபத்திற்கான காரணத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: