ஏழாவது மாநில ஊதியக்குழுவை உருவாக்க வேண்டும் : தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      திருச்சி

தமிழ்நாடு நகராட்சி தகவல் தொழில்நுட்ப அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் ஏ.பி.செந்தில்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. முருகன் முன்னிலை வகித்தார். அனைவரையும் புகழேந்தி வரவேற்று பேசினார். சிறப்புரையாளர்களாக ராமஜெயம், சரவணன், ஆகியோரும், செந்தில்நாதன், சுப்பிரமணியன், கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பணி விதிகளின் படி காலியாக உள்ள தகவல் தொழில்நுட்ப பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும். நகராட்சி நிர்வாக தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். நகராட்ச்சதி நிர்வாக தொழில் நுட்ப பணியிடங்களை பதவி உயர்வு பெற வாய்ப்புகள் குறைந்த அளவே இருப்பதால் பதவி உயர்வு பெற ஏதுவாக நகராட்சி, தரததிற்கு ஏற்ப பணியிடங்களை தரம் உயர்த்தி பதவி உயர்வு வழங்கவேண்டும்.

 

தமி-ழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தகவல் தொழில் நுட்ப பணியிடங்களை இல்லாத நிலையில் கம்யூட்டர் பணி தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப பணியிடங்களை உருவாக்கவேண்டு¢ம், ஏழாவது மாநில ஊதியக்குழுவை உருவாக்க விரைந்து அமுல்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தவேண்டும். தமிழ்நாடு நகராட்சி கணக்கு பணிகள் விதிகளின்படி உருவாக்கிய பணியிடங்களை தகுதிவாய்ந்த பணியாளர்களை கொண்டு உடனே நிரப்பவேண்டும். உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநிலம்முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இறுதியில் விஜய் அனைவருக்கும் நன்றிகூறினார்.

 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: