மயிலாடுதுறை திருஇந்தாளுர் பரிமளரெங்காதர் ஆலயத்தில் இன்று சொர்க்க வாசல் திறப்பு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      நாகப்பட்டினம்

108 திவ்ய தேசங்களில் முக்கியமாக 24-வது திவ்ய தேசமாக விளங்கும் மயிலாடுதுறை திருஇந்தளுர் அருள்மிகு பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் மூலவர் பெருமாள் முத்தங்கி அலங்காரத்துடனும் உற்சவர் ரத்தநாங்கி அலங்காரத்துடனும் பரமபதா வாசல் (சொர்க்கவாசல்) திறப்புவிழாவின் போது 1000 கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என்று கோசத்துடன் பெருமாளை வழிப்பட்டனர்.

 

மயிலாடுதுறை திருஇந்தளுரில் 108 திவ்ய தேசங்களில் மிகச்சிறப்புடன் விளங்கும் ஆலயம் அருள்மிகு பரிமளரெங்கநாதர் ஆலயம் இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி பகல் பத்து உற்சவமும் ராபத்து உற்சவமும் மிகச்சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. பகல் பத்து உற்சவம் பத்து தினங்களில் முதல் நாள் முதல் சனிக்கிழமை வரை பெருமாள் உட்பிரகாரம் படியேற்ற சேவையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு பெருமாள் மோகினி அலங்காரத்துடன் (நாச்சியார் திருக்கோலம்) பெருமாள் காட்சி அளித்தார். வைகுண்ட ஏகாதேசியான ஞாயிற்றுக் கிழமை காலை மூலவர் முத்தங்கி சேவையுடனும் உற்சவர் ரத்தங்கி சேவையுடனும் பரமபத வாசல் திறக்கும் போது 1000 கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கா ரங்கா என்ற கரகோசத்துடன் பெருமாள் வெளி வரும் போது வழிப்பட்டனர். அன்று மாலை முதல் ராப்பத்து பத்துநாள் உற்சவம் துவங்கியது. பெருமாள் உட்பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு படியேற்று சேவையும் தினசரி மாலை பரமபத வாசல் திறப்பு விழாவும் ஏகாந்த சேவை படியேற்ற சேவையும் நடைபெறுகிறது. ராப்பத்து நிறைவு நாள் அன்று நம்மாழ்வார் திருவடி தொழுதல் (ஆழ்வார் மோட்சம்) நடைப்பெற உள்ளன. விழா ஏற்பாட்டினை அறங்காவலர் துறை உதவி ஆணையர் ஞானசேகரன் மேற்பார்வையில் செயல் அலுவலர் முருகன், முரளி மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: