சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷமீர் வரை சைக்கிள் பிரச்சாரம் தெலுங்கானா மாநில இளைஞர் ரவிக்கிரணுக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      தூத்துக்குடி
kvp 1

கோவில்பட்டி

கோவில்பட்டி தேசிய பசுமைப்படை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷமீர் வரை செல்லும் தெலுங்கான மாநில இளைஞர் ரவிக்கிரணுக்கு கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொலுங்கானா மாநில இளைஞர் ரவிக்கிரண் (வயது 29) மென்பொருள் பட்டதாரி கன்னியாகுமரி முதல் காஷமீர் வரை 12 மாநிலங்கள் வழியாக 5000 கி.மீ தூரம் சுற்றுசூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நடைபயணம், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்தல், மரம் நடுதல், வாகனங்களை தவிர்த்தல்,  போன்றவற்றை வலியுறுத்தி சைக்கிள் பிரச்சாரம் செய்து வருகிறார். கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்த ரவிக்கிரணுக்கு தேசிய பசுமைப்படை சார்பில் சால்வை அணிவித்து நினைவு பரிசாக துணியிலான பை வழங்கப்பட்டது. பின்பு பள்ளியின் முன்பிருந்து கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கஸ்தூரி தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தமிழாசிரியை கெங்கம்மாள் வரவேற்றார்.

கன்னியாகுமரி முதல் காஷமீர் வரை சைக்கிள் பிரச்சாரம் செய்யும் ரவிக்கிரண் பள்ளி மாணவிகளிடையே சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்தும் பேசினார். பின்பு அனைவரும் மரம் நடவும், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவும், சுற்றுசூழலை பாதுகாக்கவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் செல்டன், காளிராஜ், முத்துராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் பசுமைப்படை ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: