முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க புதிய அதிபர் டிரம்பை ரகசிய தகவல்களை வைத்து மிரட்டுகிறோமா ? ரஷ்யா மறுப்பு

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - டொனால்டு டிரம்ப் தொடர்பான ரகசிய தகவல்களை ரஷ்யா வைத்திருப்பதாகவும் அதை வைத்து டிரம்பை ரஷ்யா மிரட்டி வருவதாகவும் அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.

தேர்தலில் வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் விரைவில் பதவி ஏற்க உள்ளார். இவரது தேர்தல் வெற்றிக்கு ரஷ்யா உதவியதாகவும், ஓட்டு எந்திரங்களை ஹேக்கிங் முறையில் ரஷ்யா தன்வசப்படுத்தி அவற்றில் தில்லுமுல்லு செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.

பத்திரிகைகள் செய்தி
இந்த நிலையில் டிரம்ப் தொடர்பான ரகசிய தகவல்களை ரஷ்யா வைத்திருப்பதாகவும் அதை வைத்து டிரம்பை ரஷ்யா மிரட்டி வருவதாகவும் அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அதில் டிரம்ப், தனிப்பட்ட வாழ்க்கையிலும், வர்த்தக ரீதியாகவும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் சில வி‌ஷயங்களை செய்துள்ளார். இந்த தகவல் ரஷ்யாவுக்கு எப்படியோ கிடைத்துள்ளது. இதை வைத்து ரஷ்யா டிரம்பை மிரட்டி வருகிறது என்று கூறி உள்ளனர்.

டிரம்ப் மறுப்பு
அமெரிக்க உளவுத்துறையின் தகவல்களை மையமாக வைத்து இந்த செய்தி வெளியிட்டு இருப்பதாகவும் அந்த பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால், இதை டிரம்ப் மறுத்துள்ளார். ரஷ்யாவுடன் எனக்கு எந்த தொடர்பும் இருந்ததில்லை. நான் எந்த மோசமான தவறும் செய்யவில்லை. எனக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற செய்திகளை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இதை உளவு அமைப்புகள் அனுமதித்து இருக்க கூடாது. ஹிட்லரின் நாஜி ஆட்சியில் அமெரிக்கா இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

ரஷ்யாவும் மறுப்பு
இதே போல் ரஷ்யாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா- அமெரிக்கா இடையே உள்ள உறவை சீர்குலைப்பதற்காக இந்த தவறான செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று ரஷ்யா கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்