தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின்பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் தைத் திருநாளை முன்னிட்டு 12.01.2017 அன்று பொங்கல் பண்டிகை தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. வங்கியின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

இவ்விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குநர் உபேந்திர காமத் அவர்கள் முன்னிலை வகித்தார். வங்கியின் இயக்குநர்கள்விக்ரமன், அரவிந்த குமார், பொதுமேலாளர்கள் குணசேகரன்,கந்தவேலு, தேவதாஸ்,ரவீந்திரன், நாயகம், துணைப் பொதுமேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள், மற்றும் அலுவலர்கள் திரளாக பங்கேற்றனர்.

விழாவில், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. வங்கியின் பெண் அலுவலர்கள் அனைவரும் இணைந்து அழகிய வண்ணக் கோலங்களிட்டு, பொங்கல் வைத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினர்

இதை ஷேர் செய்திடுங்கள்: